தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு

புதுச்சேரி : தேசிய வாக்காளர் தினத்தையொட்டி உறுதி மொழி ஏற்கப்பட்டது.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

வளர்ச்சி ஆணையர் ஆசிஷ் மாதோவ்ராவ் மோரே, தேசிய வாக்கா ளர் தின உறுதி மொழியை ஆங்கிலத்தில் வாசிக்க, அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து அரசுச் செயலர் முத்தம்மா, தமிழில் உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் ஏற்றனர்.

நிகழ்ச்சியில் அரசுச் செயலர்கள் மற்றும் தலைமைச் செயலக அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Advertisement