கவர்னர் மாளிகையில் மாநில உதய நாள் விழா

புதுச்சேரி : பல்வேறு மாநிலங்களின் உதய நாள் விழா, கவர்னர் மாளிகையில் கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி கவர்னர் மாளிகையில், நடந்த நிகழ்ச்சியில், கவர்னர் கைலாஷ்நாதன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில், புதுச்சேரி பல்கலைக்கழகம், தொழில் நுட்ப பல்கலைக்கழகம், ஜிப்மர் மருத்துவமனை, மருத்துவக் கல்லுாரி ஆகிய நிறுவனங்களில் இருந்து அசாம், ஜார்கண்ட், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, அந்தந்த மாநிலங்களின் கலாசாரம், வரலாற்றை சித்தரிக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

Advertisement