சக்ராலயா மோட்டார்ஸில் டாடா, மகேந்திரா வாகன எக்ஸ்சேஞ்ச் மேளா
கடலுார் : கடலுார் அடுத்த பெரியகங்கணாங்குப்பத்தில், சங்காலயா மோட்டார்ஸ் மற்றும் சக்ராலயா மோட்டார்ஸ் சார்பில் டாடா, மகேந்திரா வாகன எக்ஸ்சேஞ்ச் மேளா நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஜி.ஆர்.கே., குழும தலைவர் துரைராஜ் தலைமை தாங்கி எக்ஸ்சேஞ்ச் மேளாவை துவக்கி வைத்தார். த.வா.க., மாநில நிர்வாகக்குழு தலைவர் கண்ணன், ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் ராஜாராம் முன்னிலை வகித்தனர். இந்த எக்ஸ்சேஞ்ச் மேளாவில் கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநில வாகனங்களை எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளலாம்.
மேலும் மாதம் 100 முதல் 120 வாகனங்கள் வரை எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளலாம். இது தவிர எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளும் வாகனங்களுக்கு ஜி.ஆர்.கே., சார்பில் 6 மாதம் வாரண்டியும், இன்சூரன்ஸ் மற்றும் ஒராண்டு ஏ.என்.சி.,யும் அளிக்கப்பட உள்ளது என ஜி.ஆர்.கே., குழும தலைவர் துரைராஜ் கூறினார்.
அப்போது, வழக்கறிஞர் ராம்கி, செய்தி தொடர்பு அலுவலர் ஆனந்த், மேலாளர் வெங்கட் மற்றும் சங்காலயா மோட்டார்ஸ் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.