பண்டிகை கால சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
மதுரை : பண்டிகை காலங்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. அதில் சில ரயில்களின்சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
* மதுரை - காச்சிகுடா - மதுரை இடையே திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, விழுப்புரம், காட்பாடி வழியாக திங்கள் தோறும் இயக்கப்படும் ரயில் (07191) மார்ச் 31 வரை, புதன் தோறும் இயக்கப்படும் ரயில் (07192) ஏப். 2 வரை நீட்டிக்கப்படுகிறது.
* திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே தென்காசி, மதுரை, பழநி, பொள்ளாச்சி, கோவை வழியாக ஞாயிறு தோறும் இயக்கப்படும் ரயில் (06030) பிப். 2 வரை, திங்கள் தோறும் இயக்கப்படும் ரயில் (06029) பிப். 3 வரை,
எழும்பூர் - திருநெல்வேலி - எழும்பூர் இடையே விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர், விழுப்புரம் வழியாக வியாழன் தோறும் இயக்கப்படும் ரயில் (06070) பிப். 6 வரை, வெள்ளி தோறும் இயக்கப்படும் ரயில் (06069) பிப். 7 வரை நீட்டிக்கப்படுகின்றன.
* ஹூப்ளி - ராமேஸ்வரம் - ஹூப்ளி இடையே மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, சேலம், ஓசூர் வழியாக சனி தோறும் இயக்கப்படும் ரயில் (07355) ஜூன் 28 வரை, ஞாயிறு தோறும் இயக்கப்படும் ரயில் (07356) ஜூன் 29 வரை,
ராமநாதபுரம் - செகந்திராபாத் - ராமநாதபுரம் இடையே மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர், விழுப்புரம், எழும்பூர் வழியாக புதன் தோறும் இயக்கப்படும் ரயில் (07695) மார்ச் 26 வரை, வெள்ளி தோறும் இயக்கப்படும் ரயில் (07696) மார்ச் 28 வரை நீட்டிக்கப்படுகின்றன.
* காச்சிகுடா - நாகர்கோவில் - காச்சிகுடா இடையே மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், காட்பாடி வழியாக வெள்ளி தோறும் இயக்கப்படும் ரயில் (07435) மார்ச் 28 வரை, ஞாயிறு தோறும் இயக்கப்படும் ரயில் (07436) மார்ச் 30 வரை,
தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் இடையே மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக ஞாயிறு தோறும் இயக்கப்படும் ரயில் (06012) பிப். 2 வரை, திங்கள் தோறும் இயக்கப்படும் ரயில் (06011) பிப். 3 வரை நீட்டிக்கப்படுகின்றன.
* தாம்பரம் - கொச்சுவேலி - தாம்பரம் இடையே செங்கோட்டை, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக வெள்ளி தோறும் இயக்கப்படும் ரயில் (06035) ஜன. 31 வரை, ஞாயிறு தோறும் இயக்கப்படும் ரயில் (06036) பிப். 2 வரை,
தாம்பரம் - கோவை - தாம்பரம் இடையே பொள்ளாச்சி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக வெள்ளி தோறும் இயக்கப்படும் ரயில் (06184) பிப். 7 வரை, ஞாயிறு தோறும் இயக்கப்படும் ரயில் (06185) பிப். 9 வரை நீட்டிக்கப்படுகின்றன.