பெஞ்சல் புயல் பாதிப்பு தேசிய பேரிடர் குழு ஆய்வு
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் பெஞ்சல் புயல் பாதிப்புகளை தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் வீசிய பெஞ்சல் புயல், மழை மற்றும் வெள்ளப் பெருக்கில் விக்கிரவாண்டி தாலுகாவில் பெருத்த சேதம் ஏற்பட்டது.
இந்த சேத பாதிப்புகளை கடந்த டிசம்பர் 7ம் தேதி மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் நேற்று வருகை தந்த தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர், வெள்ளப் பெருக்கில் சேதமடைந்த விக்கிரவாண்டி தாலுகாவில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிந்தாமணி மற்றும் அய்யங்கோவில்பட்டு கிராமங்களில் சேதமடைந்த வீடுகள், அய்யூர் அகரத்தில் சேதமடைந்த பம்பை வாய்க்கால் மற்றும் விளைநிலங்களை பார்வையிட்டு சேதத்தை கணக்கீடு செய்தனர்.
ஆய்வின்போது, மருத்துவக் கல்லுாரி டீன் ரமாதேவி, மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் ஒழுங்கு முறை விற்பனை கூட செயலாளர் சந்துரு, நீர்வளத்துறை உதவி பொறியாளர் அய்யப்பன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உடனிருந்தனர். அதேபோன்று வெள்ளப் பெருக்கில் சேதமடைந்த திருக்கோவிலுார் அணைக்கட்டு, குடிநீர் திட்ட பாதிப்புகள் மற்றும் தேவியகரம் ஏரிக்கரை பாதிப்புகளை அமிட்டேண்டன், தசரதி உள்ளிட்டோர் அடங்கிய மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்து, சேதமதிப்பீடு செய்தனர்.
பெண்ணையாறு வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளர் தமிழ்ச்செல்வன், செயற்பொறியாளர் சோபனா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.