புளூ பிளாசம் சர்வதேச மழலையர் பள்ளி விழா
புதுச்சேரி : புளூ பிளாசம் சர்வதேச மழலையர் பள்ளி விழாவில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி, தட்டாஞ்சாவடி, வி.வி.பி., நகரில் புளூ பிளாசம் சர்வதேச மழலையர் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் முதலாமாண்டு தினத்தையொட்டி நேற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.
இதில் பள்ளி தாளாளர் சரோஜ் பூரணி தலைமை தாங்கினார். எஸ்.எஸ்.எம்.எஸ்., அறக்கட்டளை செயலாளர் சரண் பிரகாஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் தங்களின் திறமையை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் அறக்கட்டளை நிர்வாகிகள், குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் சரோஜ் பூரணி கூறுகையில், 'பள்ளி துவங்கி ஓராண்டு நிறைவு பெற்று விட்டது. பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. தற்போது பிளே குரூப், பிரி-கேஜி, எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி.,க்கான சேர்க்கைகள் நடந்து வருகின்றன' என்றார்.