திண்டுக்கல்லில் இன்று துவங்குகிறது மரியன்னைபள்ளி 175ம் ஆண்டு விழா
திண்டுக்கல் : திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி 1850 ம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக துவங்கப்பட்டு தற்போது மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வரும் நிலையில் இப்பள்ளியின் 175 ம் ஆண்டு இன்று துவங்கி ஒரு வருடம் கொண்டாடப்படுவதாக பள்ளி தாளாளர் மரியநாதன் ,பள்ளி அதிபர் மரிவளன், தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் கூறினர்.
அவர்கள் கூறியதாவது : புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி 175 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
மாநில அளவிலான விளையாட்டு, கலை, கணிதம், வினாடி-வினா போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளும், தமிழ் அறிஞர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கங்களும் நடைபெறுகிறது.
இதன் துவக்க விழா நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் பிஷப் தாமஸ் பால்சாமி தலைமை வகிக்கிறார். முன்னாள் மாணவரும் முன்னாள் கலெக்டருமான அலாவுதீன் கலந்து கொள்கிறார்.
மேயர் ,துணை மேயர் ,முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர் என்றனர்.