சி.ஐ.எஸ்.எப்., படைவீரர்கள் அணிவகுப்பு மரியாதை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதி புதூர் மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் நான்காவது பட்டாலியன் பிரிவு செயல்பட்டு வருகிறது. சுதந்திர இந்தியாவின் 76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பட்டாலியன் சீனியர் கமாண்டன்ட் சங்கர் குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.


தொடர்ந்து 10 படை அணிகளின் சிறப்பான அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றும் போது இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வேலு நாச்சியார், மருது சகோரதர்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பலரின் வீரத்தை நினைவு கூர்ந்து பேசினார்.


தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement