பொது இடத்தை ஆக்கிரமித்து வணிக வளாகம் ஊராட்சி உறுப்பினர் மீது குற்றச்சாட்டு

கூடுவாஞ்சேரி:காட்டாங் கொளத்துார் ஒன்றியம் ஊரப்பாக்கம் ஊராட்சி மேற்கு பகுதியில் கோலாச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குளத்தில் தகன மேடை உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமித்து ஊரப்பாக்கம் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஒருவர், தி.மு.க., நிர்வாகிகளுடன் இணைந்து, அதில் வணிக வளாகம் கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து அப்பகுதி வாசிகள் தெரிவித்ததாவது:

ஊரப்பாக்கம் மேற்கு பகுதியில், கோலாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்புறம் குளம் உள்ளது. இந்த குளத்தில் பல வருடங்களாக, சுற்றுவட்டார பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள்

தகன மேடையாக பயன்படுத்தி வருகின்றர். கோவிலுக்கு சொந்தமான குளம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியை இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது, அந்த இடத்தை ஆக்கிரமித்து, இரண்டாவது வார்டு உறுப்பினர் ராபர்ட் என்பவர் . அப்பகுதி சேர்ந்த தி.மு.க., பிரமுகர்களுடன் இணைந்து,

ஆக்கிரமிப்பு செய்து, அதில் புதிய கட்டடம் கட்டி வருகிறார். பொது இடத்தை ஆக்கிரமித்து அதில் லாப நோக்கத்தோடு, வணிக வளாகம் அமைக்கும் வார்டு உறுப்பினரின் முயற்சியை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து நிறுத்தி, பொதுமக்களுக்கு சொந்தமான இடத்தை மீட்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement