திருப்போரூர் கூட்டு சாலையில் மின் விளக்கு பழுது நீக்க கோரிக்கை

மறைமலை நகர்:செங்கப்பட்டு - திருப்போரூர் நெடுஞ்சாலை 25 கி.மீ., உடையது. இந்த சாலையை சுற்றியுள்ள கிராம மக்கள் செங்கப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலையில் திருப்போரூர் கூட்டு சாலையில் 2019ல் சாலை விரிவாக்கத்தின் போது நெடுஞ்சாலை துறை சார்பில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.

துவக்கத்தில் முறையாக பராமரிக்கப்பட்ட விளக்குகள் கடந்த சில ஆண்டுகளாக எரியாமல் வீணாகி வருகிறன. வாகன ஓட்டிகள் கூறியதாவது:

உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டதில் இருந்து விபத்து மற்றும் வழிப்பறி அச்சமின்றி பொதுமக்கள் சென்று வந்தனர். தற்போது இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் அச்சத்துடன் சென்று வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த உயர் கோபுர மின் விளக்குகளை பழுது நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement