சாலை நடுவே திரும்பும் வாகனங்களால் நெரிசல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இரு வழிச்சாலை உள்ளது. இச்சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தில், நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.

தற்போது, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், தக்கோலம் கூட்டுச்சாலை வரை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், கருப்பட்டிதட்டடை அருகே, சாலை நடுவே திரும்பும் வாகனங்களால், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக, கருப்பட்டிதட்டடை, ஒலிமுகமதுபேட்டை, பருத்திகுளம் அருகே தனியார் அரிசி ஆலைகளுக்கு வரும் லாரிகள், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை நடுவே திருப்புவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, சாலை நடுவே வாகனங்கள் திருப்புவதை தடுக்க, சம்பந்தப்பட்ட அரிசி ஆலை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement