ஓவர் லோடு லாரிகளால் விபத்து அபாயம்

சித்தாமூர்:செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளான சித்தாமூர், பவுஞ்சூர், ஜமீன் எண்டத்துார், ஓணம்பாக்கம், நெல்வாய்பாளையம், ஆக்கினாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கல்குவாரிகள் செயல்படுகிறது.

கல்குவாரிகளில் இருந்து லாரிகள் மூலமாக ஜல்லி,எம்-சாண்ட், பி-சாண்ட், கருங்கற்கள் கட்டுமானப் பணிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்து லாரிகள் மூலமாக அதிகபடியான பாரங்கள் ஏற்றிச்செல்வது, சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

லாரியில் எம் -சாண்ட் எடுத்து செல்லும் போது தார்பாய் மூடாமல் செல்வதால் காற்றில் துாசு பறக்கிறது. லாரிகளை பின் தொடர்ந்து செல்லும், பிற வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.

ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement