பவுஞ்சூர் வெங்கடா நகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு

பவுஞ்சூர், பவுஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கடா நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

பவுஞ்சூர் ஏரிக்கரையில் உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து மேல்நிலைத் தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, வெங்கடா நகர் பகுதி மக்களுக்கு குழாய்கள் மூலமாக தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த வாரம் வடிகால்வாய் கட்டுமானப் பணியின் போது சாலை ஓரத்தில் குடிநீர் தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற அமைக்கப்பட்டு உள்ள பழுப்பு உடைந்ததால், கடந்த சில நாட்களாக வெங்கடா நகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள குடிநீர் குழாயை சீரமைத்து முறையாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

Advertisement