தொழிலாளிக்கு ஆயுள்

திருவண்ணாமலை:தண்டராம்பட்டு அருகே, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தென்கரும்பலுாரை சேர்ந்தவர் அந்தோணி பிரதாப், 44, தொழிலாளி. இவர் கடந்த, 2023 ஜூன், 17ல், 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். புகார் படி அவரை, தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் கைது செய்தனர்.

இந்த வழக்கு, திருவண்ணாமலை மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி நேற்று முன்தினம் மாலை, தொழிலாளி அந்தோணிக்கு ஆயுள் தண்டனை மற்றும், 3,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

Advertisement