மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பெரிய வைலாம்பாடியை சேர்ந்தவர் செல்வம், 35. தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள், மகன் உள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் அப்பகுதியில் கோவை ஈஷா யோக மைய, மஹா சிவராத்திரி விழிப்புணர்வு ரத ஊர்வலம் நடந்தது.
அப்போது அப்பகுதியில் சென்ற தாழ்வான மின்கம்பியில் ரதம் உரசியதில் அருகிலிருந்த செல்வம் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். கொண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement