சாலவாக்கத்தில் சமுதாய கூடம் திறப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் கிராமத்தில், 700-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, சுபநிகழ்ச்சிகள் நடத்த சமுதாய கூடம் இல்லாமல் இருந்தது. எனவே, நீண்ட நாட்களாக சமுதாய கூடம் அமைக்க, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி, கடந்த 2023 --- 24ம் நிதியாண்டில், சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ், 42.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சமுதாய கூடம் கட்டி முடிக்கப்பட்டது.

புதிய சமுதாய கூடம் திறப்பு நிகழ்ச்சி ஊராட்சி தலைவர் சத்தியா தலைமையில் நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., - சுந்தர் பங்கேற்று, புதிய சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

Advertisement