விளையாட்டு வீரர்களிடம் 'டென்ஷன்' ஆன அமைச்சர்

புழல்,வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், புழல் பகுதியில் பள்ளி மற்றும் விளையாட்டு வீரர்கள் ஓய்வறை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

இப்பணிகளை, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று ஆய்வு செய்தார்.

மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில், 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் வகுப்பறை கட்டுமான பணிகள் மற்றும் 2.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் கால்பந்தாட்ட விளையாட்டு திடல் மேம்படுத்தும் பணிகளையும், அமைச்சர் ஆய்வு செய்தார்.

அப்போது, அங்கு வந்த விளையாட்டு வீரர்கள் சிலர், 'பணிகள் முறையாக செய்வதில்லை. நீங்கள் வந்ததால் தான், இன்று வந்து வேலை செய்கின்றனர்' என, புகார் தெரிவித்தனர்.

அப்போது, ஒரு இளைஞர் மட்டும் தொடர்ந்து புகார் கூறியபடி இருந்தார். இதனால் டென்ஷனான அமைச்சர், இளைஞரை கண்டித்து, ''மைதானத்தை இரண்டு மாதங்கள் ஒப்பந்ததாரரிடம் ஒப்படையுங்கள். அப்போது தான் வேலை சீக்கிரம் முடியும்.

அதில்லாமல் விளையாடவும் வேண்டும்; வேலையும் முடிய வேண்டும் என்றால் எப்படி?” என, அறிவுறுத்தினார்.

Advertisement