கல்லுாரி வகுப்பறையில் படம் எடுத்த நல்ல பாம்பு

ஆவடி, ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகரில், தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி உள்ளது. இங்குள்ள காலி மைதானம், சில மாதங்களுக்கு முன் சுத்தம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வகுப்பறைக்குள் பாம்பு புகுந்தது. இதை கண்ட கல்லுாரி நிர்வாகத்தினர், பாம்பு வேறு எங்கும் சென்று பதுங்காமல் இருக்க, அறையை பூட்டி வைத்தனர்.

தகவலறிந்து வந்த ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு நிறுவன குழுவினர், வகுப்பறையில் இருந்த 4 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை, பத்திரமாக மீட்டு, சீதாஞ்சேரி வனப்பகுதியில் விடுவித்தனர். வகுப்பறையில் மாணவர்கள் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Advertisement