சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், செங்கட்டானுார் கிராமத்தில், 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். செங்கட்டானுார் கிராமத்தில், அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில், செங்கட்டானுார், பைவலசா, கட்டாரிகுப்பம். சித்தப்பனுார், பீமாரெட்டியூர், மயிலாடும்பாறை, நாககுப்பம், முள்ளிபாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பள்ளிக்கு கூடுதலாக பைவலசா சாலையில் புதிய வகுப்பறை கட்டடமும், சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால், இந்த கட்டடத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை.

இதனால், வெளிநபர்களும் பள்ளி வளாகத்திற்குள் வந்து செல்லும் நிலை உள்ளது. இந்த பள்ளி வளாகத்தை ஒட்டியுள்ள மாணவர் விடுதிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ள நிலையில், பள்ளி வளாகத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

பள்ளியின் பாதுகாப்பு கருதி, விரைவில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement