வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி
வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி
கோபி :கோபி அருகே எரப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த நடராஜின் மகன் தீபக், 9, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், நான்காம் வகுப்பு படித்தார். உக்கரம் காளிகுளத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில், சக நண்பர்களுடன் நேற்று காலை குளித்தபோது, நீச்சல் தெரியாமல் தீபக் தண்ணீரில் மூழ்கினார். தீபக்கை மீட்டு சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தந்தை நடராஜ் கொடுத்த புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement