திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

கடலுார் : கடலுார் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது.

கடலுார் அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றது.

இக்கோவில் கும்பாபிஷேக விழா, 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடக்கிறது. கும்பாபிஷேக விழா கடந்த 29ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது.

விழாவை முன்னிட்டு, காலை விஸ்வரூப தரிசனம், ஹோமம், பிரதான பூஜைகள் நடந்து, காலை 9:30 மணி முதல் 10:30 மணிக்குள் புனித நீர் கொண்டுவரப்பட்டு, கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.

தொடர்ந்து, வேத, திவ்ய பிரபந்த சாற்றுமுறை நடக்கிறது. இரவு மலர் அலங்காரத்தில் தேவநாதசுவாமி உபய நாச்சியாருடன் திருவீதியுலா நடக்கிறது.

Advertisement