மங்களூரு - புதுடில்லி இடையே காலை நேர விமான சேவை
தட்சிண கன்னடா : தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டின் தலைநகரான புதுடில்லிக்கு, ஏற்கனவே இண்டிகோ நிறுவனம், மதிய வேளையில் விமானத்தை இயக்கி வருகிறது.
இந்நிலையில், 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமான நிறுவனம், மங்களூரில் இருந்து புதுடில்லிக்கு காலை நேர விமான போக்குவரத்தை நேற்று துவக்கி உள்ளது. மங்களூரில் இருந்து ஐஎக்ஸ் 1552 விமானம் தினமும் காலை 6:40 மணிக்கு புறப்பட்டு, 9:35 மணிக்கு புதுடில்லி சர்வதேச விமான நிலையத்தை சென்றடையும்.
புதுடில்லியில் இருந்து ஐஎக்ஸ் 2768 விமானம், தினமும் காலை 6:40 மணிக்கு புறப்பட்டு, 9:35 மணிக்கு மங்களூரு சர்வதேச விமான நிலையம் வந்தடையும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement