'மஹா கும்பமேளா நெரிசலில் சிக்கி நாகசாது உயிரிழக்கவில்லை'
சித்ரதுர்கா: ''மஹா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி, சித்ரதுர்காவின் நாக சாது உயிரிழக்கவில்லை,'' என மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
சித்ரதுர்கா பஞ்சாரா குரு பீடத்தில் வசித்து வந்தவர் ராஜ்நாத் மகாராஜ். நாகசாதுவான இவர், உ.பி., கும்ப மேளா நெரிசலில் சிக்கி, உயிரிழந்துவிட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மஹா கும்பமேளாவில் பங்கேற்க சென்ற நாக சாதுவான ராஜ்நாத் மகாராஜ், அங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழக்கவில்லை. அங்கிருந்து 500 கி.மீ., முன்னதாக உள்ள ஜான்சி ரயில் நிலையத்தில் இருந்தபோது, இயற்கையான மரணம் அடைந்துள்ளார்' குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாரா குரு பீடத்தின் மடாதிபதி சர்தார் சேவாலால் ஸ்ரீ கூறுகையில், ''நாகசாது இயற்கை முறையில் உயிரிழந்ததாக தெரிவிக்கின்றனர். ஆனால், நெரிசலில் சிக்கி உயிரிழந்தாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் தான், நான் ஊடகத்தினரிடம் தெரிவித்தேன்.
''சாதுவின் உடல் அங்கு ஆதரவின்றி இருக்கக் கூடாது. அவரது உடலை சித்ரதுர்காவுக்கு கொண்டு வந்து, நல்லடக்கம் செய்ய உத்தர பிரதேசம், கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.