இதை வெளிநாட்டில் சொல்வதற்கு வெட்கப்படுகிறேன்: ஆம்ஆத்மியை சாடிய ஜெய்சங்கர்

7


புதுடில்லி: டில்லியில் அத்தியாவசிய பொருட்கள் இல்லை என்பதை வெளிநாட்டில் சொல்வதற்கு வெட்கப்படுகிறேன் என டில்லி ஆம்ஆத்மி அரசை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக சாடியுள்ளார்.


இது தொடர்பாக டில்லியில் அவர் பேசியதாவது: ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்த டில்லி மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். ஆம் ஆத்மி ஆட்சியில் 10 ஆண்டுகளாக நகரம் பின்தங்கி உள்ளது. நாட்டின் சிறந்த வளர்ச்சிகளுக்கு டில்லி ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அடிப்படை வசதிகள் குறித்து அளித்த வாக்குறுதிகளை ஆம் ஆத்மி நிறைவேற்றவில்லை.

தேசிய தலைநகரில் உள்ள மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் ஆம் ஆத்மி அரசு செய்யவில்லை. சுத்தமான தண்ணீர், மின்சாரம், சுகாதாரம், வீடுகள் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளை ஆம் ஆத்மி கட்சி வழங்கவில்லை. நகரம் பின்தங்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. வரவிருக்கும் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கு கட்டாயமாக மக்கள் ஓட்டளிக்க வேண்டும்.



நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம், உலகத்திடம் ஒரு விஷயத்தை மறைக்கிறேன். வெளிநாடுகளுக்குச் சென்று, தேசிய தலைநகரில் வசிக்கும் மக்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் கிடைக்கவில்லை, சிலிண்டர்கள் இல்லை, குழாய் தண்ணீர் கிடைக்கவில்லை என்று சொல்ல வெட்கப்படுகிறேன். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

Advertisement