மத்திய பட்ஜெட்டிற்கு எப்.கே.சி.சி.ஐ., பாராட்டு
பெங்களூரு : 'மத்திய பட்ஜெட் திட்டங்கள் பாராட்டுக்குரியது' என, எப்.கே.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது.
மத்திய பட்ஜெட் குறித்து எப்.கே.சி.சி.ஐ., எனும் கர்நாடகா வணிக மற்றும் தொழில்துறை அறப்பணிகள் கூட்டமைப்பு தலைவர் எம்.ஜி. பாலகிருஷ்ணா அளித்த பேட்டி:
மத்திய பட்ஜெட்டில் விவசாயம், சிறு தொழில், கல்வி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. தொழில் துறை வளர்ச்சி, தொழில் முனைவோருக்கு பெரிதும் பயனுள்ள வகையில் உள்ளது. இந்த பட்ஜெட், கர்நாடகாவின் தொழில் துறை, வர்த்தக துறையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்போர், வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பு, நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக உள்ளது. கல்விக்காக 500 கோடி ரூபாய் செலவில் ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது குறித்த திட்டம்; முதல் முறையாக ஐந்து லட்சம் தொழில் முனைவோருக்கு, 2 கோடி ரூபாய் அளவில் கடன் வழங்கும் திட்டம் பாராட்டுக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
துணைத்தலைவர் உமா ரெட்டி உடனிருந்தார்.