அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி எதிரொலி; பதிலுக்கு கனடா, மெக்சிகோ வரி விதிப்பு
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த புதிய இறக்குமதி வரியை அடுத்து, கனடாவும், மெக்சிகோவும் அமெரிக்காவின் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அறிவித்துள்ளது.
அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பு ஏற்ற முதல் நாளில் இருந்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். புதிய மாற்றங்களை உருவாக்கி வருகிறார். அந்த வகையில், கனடா, மெக்சிகோ, சீனா நாட்டு பொருட்களுக்கு புதிய இறக்குமதி வரியை விதித்துள்ளார். அவர் சட்டவிரோத பொருட்கள் இறக்குமதியை தடுக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து சமூகவலைதளத்தில் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று முதல் மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், சில மருந்து பொருட்களுக்கு 25% வரியையும், சீனா பொருட்களுக்கு 10 சதவீத கூடுதல் வரிகளும் விதித்து அமல்படுத்தியுள்ளேன்.
சட்டவிரோத வெளிநாட்டினர் நமது குடிமக்களைக் கொல்லும் கொடிய மருந்துகளின் முக்கிய அச்சுறுத்தல் காரணமாக இந்த உத்தரவு சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் மூலம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நாம் அமெரிக்கர்களைப் பாதுகாக்க வேண்டும், மேலும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அதிபராக எனது கடமை. சட்டவிரோத வெளிநாட்டினர் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தலை தடுப்பதாக எனது பிரசாரத்தில் நான் உறுதியளித்தேன், மேலும் அமெரிக்கர்கள் பெருமளவில் அதற்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டிரம்ப் விதித்த புதிய இறக்குமதி வரியை அடுத்து, கனடாவும், மெக்சிகோவும் அமெரிக்காவின் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அறிவித்துள்ளது.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகள் பொருட்களுக்கு மாறி, மாறி வரி விதித்து வருவது உலக நாடுகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இதனை அமெரிக்காவின் அண்டை நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.