பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழா துவக்கம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா பெருநகர் கிராமத்தில், பட்டுவதனாம்பிக்கை சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் 14 நாட்கள் தைப்பூச திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டுக்கான தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.

முன்னதாக, காலை 7:00 கொடிமரத்தின் முன், பட்டுவதனாம்பிக்கை அம்பாள் மற்றும் பிரம்மபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின், கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து, விழா நாட்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் சிம்ம வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, நாக வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், கைலாச பீட வாகனம் ஆகியவற்றில், அமர்ந்தவாறு உற்சவர் வீதியுலா நடக்கவுள்ளது.

வரும் -8ல் தேர்த் திருவிழா நடக்கிறது. வரும் 11ல் செய்யாற்றில் 23 கிராம தெய்வங்கள் வந்து, பிரம்மபுரீஸ்வரருடன் சேர்ந்து மகோன்னதக் காட்சியளிக்க உள்ளனர்.



தைப்பூச விழா உற்சவம் விபரம்




நாள் காலை உற்சவம் இரவு உற்சவம்


3 சந்திரசேகரர் புறப்பாடு சூரிய பிரபை, சந்திர பிரபை


4 சந்திரசேகரர் புறப்பாடு முருகர் மயில் வாகனம், விநாயகர் பெருச்சாளி வாகனம், சந்திரசேகரர் புறப்பாடு


5 சந்திரசேகரர் புறப்பாடு நாக வாகனம்


6 பட்டுவதனாம்பிகை அம்பாள் பூமால் செட்டிகுளம் செல்லுதல் திருக்கல்யாணம், ரிஷப வாகனம்


7 கந்தபொடி உற்சவம் யானை வாகனம்


8 ரதோற்சவம் -


9 பிட்சாடனர் உற்சவம் குதிரை வாகனம்


10 அறுபத்து மூவர், பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளல் கைலாசபீட வாகனம்


11 பிரம்மபுரீஸ்வரர் ரிஷப வாகனத்தில் செய்யாற்றுக்கு எழுந்தருளல் செய்யாற்றில் 23 ஊர் சுவாமிகள் தைப்பூச தரிசனம்


12 கொடி இறக்கம் -


13 - பஞ்சமூர்த்திகள் தங்களது வாகனத்தில் எழுந்தருளல்


14 - மாவடி சேவை15 திருமுறை திருவிழா -

Advertisement