உலகின் மிக உயர நந்தி சிலை கும்பாபிஷேகம் கோலாகலம்

வாழப்பாடி; உலகின் மிக உயர நந்தி சிலைக்கு கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி, வெள்ளாளகுண்டத்தில், ராஜலிங்கேஸ்வரர் சிவன் கோவிலில், 45 அடி உயர மஹா அதிகார நந்தி சிலை அமைக்கும் பணி, மூன்றாண்டுகளாக நடந்தது. இதில், சிறப்பம்சமாக, நந்தி வயிற்றில் உள்ளே சென்று தரிசிக்கும்படி, மலையில் இருந்து தோன்றும் வடிவில், 15 அடி உயர சிவபெருமான், 18 சித்தர்கள், பைரவர், சிவலிங்கம் உள்ளன. அதன் கும்பாபிஷேக விழாவுக்கு, கடந்த, 20ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

நேற்று முன்தினம் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, பால்குடம் எடுத்தல், தீப ஜோதி விளக்கேற்றுதல், விக்னேஷ்வர, நவ கிரஹ, தன்வந்திரி, இரண்டாம் கால யாகம், லட்சுமி பூஜைகள், சுதர்சன ஹோமம் நடந்தன.

தொடர்ந்து சிவன் கோவிலில் கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. நந்திக்கும் கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. பின், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், நெய்வேத்தியம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement