வெள்ளியணை, க.பரமத்தியில் 2 பெண்கள் மாயம்



கரூர்: கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி மகள் மஹி, 24; கரூர் அரசு கலைக்கல்லுாரியில், பி.காம்.,- சி.ஏ., இரண்டாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 31 காலை கல்லுாரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற, மஹி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, மஹியின் தந்தை பாலசுப்பிரமணி, கொடுத்த புகாரின் படி வெள்ளியணை போலீசார் விசாரிக்-கின்றனர்.


* கரூர் மாவட்டம், விஸ்வநாதபுரி குளத்துப் பட்டி பகுதியை சேர்ந்த, விஜயகுமார் மகள் விஜ-யலட்சுமி, 25; டெய்லர். இவர் கடந்த, 31ல் வீட்டில் இருந்து, வேலைக்கு சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, விஜயலட்சுமியின் தாய் சின்னம்மாள், 42; கொடுத்த புகாரின்படி, க.பரமத்தி போலீசார் விசா-ரிக்கின்றனர்.

Advertisement