அயர்லாந்தில் நடந்த விபத்தில் இந்தியர் 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் பலத்த காயம்
டப்ளின்: அயர்லாந்தில் நடந்த கார் விபத்தில் செருகுரி சுரேஷ் சவுத்ரி மற்றும் பார்கவ் சித்தூரி ஆகிய இரண்டு இந்திய மாணவர்கள் உயிரிழந்தனர்.
அயர்லாந்தில் கார்லோ நகருக்கு அருகில் உள்ள கிரேகுவெனாஸ்பிடோகே என்ற இடத்தில் கருப்பு நிற ஆடி ஏ6 கார் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கார் விபத்தில் செருகுரி சுரேஷ் சவுத்ரி மற்றும் பார்கவ் சித்தூரி ஆகிய இரண்டு இந்திய மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அயர்லாந்து போலீசார் உறுதி செய்தனர்.
இது குறித்து அயர்லாந்து தலைநகர் டப்ளினில் உள்ள இந்திய தூதரகம் சமூகவலைதளத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டது. அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின், கார்க்கில் ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது, 'விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்த செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன்' என்றார்.
இவர்கள் கார்லோ நகரில் ஒன்றாக வீடு வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். பாதிக்கப் பட்ட நான்கு பேரும் கார்லோவில் உள்ள தென்கிழக்கு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் ஆவர். இவர்களில் ஒருவர் மருந்து கடையில் பணிபுரிந்து வந்தார்.