சற்று ஆறுதல் தந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.680 சரிவு; ஒரு சவரன் ரூ.61,640
சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து, கிராம் 7,705 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 61ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் ஜன.,31ம் தேதி ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, 61,840 ரூபாயாக அதிகரித்துள்ளது. கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 7,730 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 107 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
பிப்.,01ம் தேதி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.61,960க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. அதன் படி ஒரு கிராம் ரூ. 7,745க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் முறையாக உயர்ந்தது. கிராம் 7,790 ரூபாய்க்கும், சவரன் 62,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று (பிப்., 02) தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (பிப்.,03) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து, கிராம் 7,705 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 61ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை உச்சம் தொட்டு வந்த நிலையில், இன்று சற்று விலை குறைந்து நகைப்பிரியர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.