த.வெ.க., கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா

குளித்தலை: த.வெ.க.,வின், கரூர் கிழக்கு மாவட்ட செய-லாளர் மற்றும் இணை செயலாளர் நியமிக்கப்பட்-டதை வரவேற்கும் நிகழ்ச்சி மற்றும் கட்சியின், 2ம் ஆண்டு துவக்க விழா, குளித்தலையில் நேற்று நடந்தது. கட்சியினர், டூவீலரில் பேரணி-யாக சென்று காந்தி சிலைக்கு மாலை அணி-வித்து உறுதிமொழி ஏற்றனர்.


தொடர்ந்து, கரூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பாலசுப்பிரம-ணியன், இணை செயலாளராக சதாசிவம் ஆகி-யோரை நியமனம் செய்த, தலைவர் விஜய்க்கும், பொதுச்செயலாளர் ஆனந்த்க்கும் நன்றி தெரிவித்-தனர். கரூர் கிழக்கு மாவட்ட இணை செயலாளர் சதாசிவம், பொருளாளர் வினோத், மாவட்ட துணை செயலாளர் தர்ஷினி, மாவட்ட துணை செயலாளர் கபில் உள்பட பலர் கலந்து கொண்-டனர்.

Advertisement