மாணவியை பார்க்க சென்றதால் அடிதடி: 7 பேர் மீது வழக்குப்பதிவு
குளித்தலை: கரூர், தான்தோன்றிமலையை சேர்ந்தவர் துள-சிசுதர்சன், 20; அரசு கல்லுாரியில், பி.பி.ஏ., மூன்றாம் ஆண்டு படிக்கிறார். இவருக்கு, கரூர் தனியார் கல்லுாரில் படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவி நேரில் வரு-மாறு அழைத்துள்ளார். இதையடுத்து, துளசி சுதர்சன் மற்றும் இவரது நண்பர் விஷால் ஆகிய இருவரும், கடந்த ஜன., 24 மதியம், 2:30 மணிக்கு சிந்தாமணிப்பட்டி பெட்ரோல் பங்க்கிற்கு சென்-றனர். அப்போது மாணவியின் உறவினர்கள் ஒன்று திரண்டு, 'எப்படி நீ மாணவியை பார்க்க வரலாம்' எனக்கூறி, தாக்கி, அவர் கழுத்தில் அணிந்திருந்த, 3 பவுன் தங்கச்சங்கிலி, மொபைல் போனை பறித்துக்கொண்டு தாக்கி உள்ளனர்.
காயமடைந்த துளசி சுதர்சன், கரூர் அரசு மருத்-துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதே வழக்கில், மாணவியின் தரப்பினர் அளித்த புகார்படி, துளசிசுதர்சன், விஷால் ஆகிய இரு-வரும் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்-றனர்.