கோரைக்கு நிலையான விலை கிடைக்க அரசு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை

கரூர்: 'கோரைக்கு நிலையான விலை கிடைக்க கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கரூர் மாவட்டத்தில் கோரை சாகுபடி, 12 ஆயிரம் ஏக்கரில் நடக்கிறது. காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளான புகழூர், புஞ்சைத்தோட்-டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாபாளைம், நெரூர், அரங்கநாதன்பேட்டை, சோமூர், மாயனுார், கட்டளை, ரெங்கநாதபுரம், மேலமா-யனுார், நத்தமேடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக-ளவில் கோரை சாகுபடி நடக்கிறது.


இங்கு, அறுவடை செய்யப்படும் கோரைகள், 6 முடிகள் கொண்டதாக கட்டப்பட்டு அவை நேர்த்தி செய்யப்பட்டு, திருநெல்வேலி மாவட்டம் கயத்தார், சேலம் மாவட்டம் ஓமலுார் போன்ற பகுதிகளுக்கு இடைத்தரகர்களால் கொள்முதல் செய்யப்படுகிறது. அங்கு கோரைகள் நன்கு உலர்த்தப்பட்டு, சாயமேற்றி தறிகள் மூலம் சாதாரண பாய்கள், கல்யாண பாய்கள் என உற்-பத்தி செய்கின்றனர். இந்த பாய்கள் அரேபிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. இந்தி-யாவின் பல்வேறு பகுதிகளிலும் சந்தைப்படுத்-தப்பட்டு வருகிறது.
தற்போது, கரூர் மாவட்டத்தில் கோரை அறுவ-டைப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. இருப்-பினும் கோரைக்கு உரிய விலை கிடைக்காததால் அறுவடை கூலி கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் தவிக்கின்றனர்.
இது குறித்து கோரை விவசாயிகள் கூறியதா-வது:
கோரையானது ஆண்டுக்கு இருமுறை அறு-வடை செய்வோம். ஒரு அறுவடைக்கு கோரை நன்கு வளர உரச்செலவு மட்டும், 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. அறுவடைக்கு கூலித் தொழிலாளர்கள் கிடைப்பதிலும் சிரமம் உள்ளது. ஏக்கருக்கு, 1.25 ரூபாய் லட்சம் வரை செலவாகிறது. ஆனால், 6 முடிகொண்ட 5 அடி உயரம் கொண்ட ஒரு கோரை கட்டு, 1,250 ரூபாய் -க்கு மட்டுமே இடைத்தரகரகள் வாங்குகின்றனர். நல்ல விளைச்சலாக இருந்தால் ஏக்கருக்கு, 120 கட்டுகள் கிடைக்கும். அதுவும் சறுகு இல்லாமல் நன்றாக கோரை வளர்ந்தால்தான் விளைச்சல், 120 கட்டுகளாக இருக்கும். விளைச்சல் குறைந்தால் ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. சில மாதங்களில் கட்டு, 1,000 ரூபாய் கீழேயும் போய்விடும். அப்போது மிகவும் நஷ்டம் ஏற்படும்.
ஒரு கட்டு, 2,000 ரூபாய் வரை விலை நிர்ண-யிக்கப்பட்டால்தான் உற்பத்தி செலவு போக, ஏக்-கருக்கு, 20 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். கோரைக்கு தொடர்ந்து நிலையான விலை கிடைக்க தமிழக அரசு நெல்கொள்முதல் நிலையம் போல கோரைகொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

Advertisement