இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல்; பாலஸ்தீனர்கள் 50 பேர் சுட்டுக்கொலை

5


ஜெருசலேம்: ஜெனின், துல்கரேம் மற்றும் தமுன் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் ட்ரோன் தாக்குதலில் பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் 50 பேர் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.



காசாவை ஆளும் ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி நுழைந்து பொதுமக்கள் 984 பேர் உள்பட 1,970 பேரை படுகொலை செய்தனர். இதையடுத்து காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 47,417 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே, காசாவில் போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், மேற்கு கடற்கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 கட்டடங்கள் தரைமட்டமானது. ஒரே நேரத்தில் ஏராளமான குண்டுகளை வீசி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதால், அப்பகுதி புகை மூட்டமாகக் காட்சி அளித்தது.


உள்ளூர் தீவிரவாத அமைப்பினரின் மறைவிடங்கள் மற்றும் ஆயுதப் பதுக்கல் மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஜெனின், துல்கரேம் மற்றும் தமுன் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் ட்ரோன் தாக்குதலில் பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் 50 பேர் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


மேலும் பாலஸ்தீனர்கள் 100 பேரை இஸ்ரேல் ராணுவத்தினர் சிறை பிடித்து வைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து 40க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement