தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், 2 மகன்கள் பரிதாப பலி

1

நாமக்கல்: நாமக்கல் போதுப்பட்டி காலனியில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மன்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


நாமக்கல் போதுப்பட்டி காலனியில் தண்ணீர் தொட்டியில் 11 மாத குழந்தையான நிதின் ஆதித்யா தவறி விழுந்தான். உடனே தவறி விழுந்த 11 மாத குழந்தையான நிதின் ஆதித்யாவை காப்பாற்ற அவரது அண்ணன் யாத்விக் ஆரியன் (3) சென்றுள்ளான்.


இதையடுத்து தனது குழந்தைகள் இருவரையும் காப்பாற்ற தாய் இந்துமதி (28) சென்றுள்ளார். பின்னர் தாய், இரு மன்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement