தமிழக கவர்னரை நீக்க கோரிய மனு; சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

2

புதுடில்லி: தமிழக கவர்னரை நீக்கக் கோரிய வழக்கை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்தது.


தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நீக்க கோரி வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (பிப்.,03) நீதிபதி சஞ்சீன் கன்னா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'திராவிடத்திற்கு எதிராக கவர்னர் பேசி வருகிறார். சட்டசபையில் இருந்த கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது' என வாதிடப்பட்டது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், 'அரசியலமைப்பு நடைமுறைக்கு புறம்பாக கோரிக்கை உள்ளது. எப்போதெல்லாம் கவர்னர் விவகாரம் தொடர்பான பிரச்னைகள், முரண்பாடுகள் வருகிறதோ, அப்போதெல்லாம் நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பித்து வருகிறது. எனவே கவர்னரை நீக்க வேண்டும் என்ற இந்த மனுவை ஏற்க முடியாது' என்றனர். இதையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement