அரசு அலுவலகங்களில் இனி மராத்தி தான் பேசணும்! மஹாராஷ்டிராவில் அதிரடி

4

மும்பை; மஹாராஷ்டிராவில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மராத்தி மொழி பேசுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.



மஹாராஷ்டிராவில் மராத்தி மொழியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அரசு மேற்கொண்டுள்ளது. அதன் முக்கிய கட்டமாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் மராத்தி மொழியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.


தங்களின் அலுவலகங்களில் அனைவரும் மராத்தி மொழியைத் தான் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். நாட்டின் பல்வேறு மாநிலங்களில், பிற நாடுகளில் இருந்து வருபவர்கள் தவிர்த்து அனைத்து பார்வையாளர்களுடனும் மராத்தி தான் பேச வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.


அதில் கூறப்பட்டு உள்ளதாவது;


மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் மராத்தி மொழி தான் பேசவேண்டும். மராத்தியில் அனைவரும் பேசுவபதை ஊக்குவிக்கும் விதமாக, அலுவலகங்களில் இருக்கும் சைன்போர்டுகள் மராத்தியில் நிறுவப்படும். அரசு அலுவலக கணினிகளில் இனி மராத்தி மொழியை தட்டச்சு செய்யும் வகையில் விசைப்பலகைகள் (type writing) இருக்கும்.


இந்த விதியை மீறினால் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அலுவலகம் அல்லது அந்தந்த பொறுப்பாளரிடம் புகார் அளிக்கலாம். மராத்தி பேசாதவர்கள் உத்தியோகத்தில் ஒழுங்கற்ற செயலை செய்ததாக கருதி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.


அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் திருப்தி இல்லை எனில், மனுதாரார் மஹாராஷ்டிர சட்டசபையின் மராத்தி மொழிக்குழுவில் மேல் முறையீடு செய்யலாம்.


இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement