பஸ் மோதி தொழிலாளி பலி

பெ.நா.பாளையம்; நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கட்டப்பெட்டு, பாரதி நகரில் வசித்தவர் பாலகிருஷ்ணன்,57. நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் கோவை வந்தவர் பணிகளை முடித்துவிட்டு கோத்தகிரி திரும்பிக் கொண்டிருந்தார்.

மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, கர்நாடகா சுற்றுலா பஸ், பாலகிருஷ்ணன் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார்.

Advertisement