சமூக தணிக்கை விழிப்புணர்வு கூட்டம்

அன்னுார்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டு ஏப். 1 முதல், 2024ம் ஆண்டு மார்ச் 31 வரை நடைபெற்ற பணிகள் மற்றும் 2016 முதல் 2021 வரை பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் குறித்த சமூகத் தணிக்கை ஒவ்வொரு வாரமும் கோவை மாவட்டத்தில் 10 ஊராட்சிகளில் நடக்கிறது.

அன்னுார் ஒன்றியத்தில் அல்லப்பாளையம் ஊராட்சியில் நேற்று விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

வட்டார வள அலுவலர் கனகராஜ் பேசுகையில், ''கடந்த நிதியாண்டில் செய்யப்பட்ட பணிகளை அளவீடு செய்யவும், ஆவணங்களை ஆய்வு செய்யவும் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என்றார்.

ஊராட்சி செயலர் ராஜகோபால், 100 நாள் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சுய உதவி குழு கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

காரமடை ஒன்றியத்தில் பள்ளேபாளையம், சிக்காரம் பாளையம் ஊராட்சிகள், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வட வேடம்பட்டி ஊராட்சி உள்பட கோவை மாவட்டத்தில் 10 ஊராட்சிகளில் நேற்று விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

சமூக தணிக்கை வருகிற 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 7ம் தேதி காலை 11:00 மணிக்கு 10 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது. சமூக தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.

Advertisement