மதுரையில் 144 தடை! அமைச்சருக்கு மட்டும் அனுமதி; தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
சென்னை: மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்த தி.மு.க., அரசு, அமைச்சர் மூர்த்தி ஊர்வலத்திற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கியது என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
@1brஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்;
தமிழகம் முழுவதும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் தி.மு.க.,வினரை, சட்ட நடவடிக்கைகளிலிருந்து காப்பாற்றி வருவது போல, அமைச்சர் மூர்த்தியையும், சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டுச் செயல்பட அனுமதிக்கிறதா தி.மு.க., அரசு?
தி.மு.க.,வினர் கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி, பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டங்களுக்கு அனுமதி வழங்காமல் பாரபட்சமாகச் செயல்படும் தி.மு.க.,வை, உயர்நீதிமன்றமே கண்டித்திருக்கிறது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலையின் புனிதத்தைக் காக்க, ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் ஜனநாயக ரீதியான போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், பொதுமக்கள் எழுச்சியைத் தடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு தடை விதித்த தி.மு.க., அரசு, தமிழகம் முழுவதும் குற்றங்களின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் தி.மு.க.,வினர் ஊர்வலத்தை அனுமதித்திருப்பது ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக்கியிருக்கிறது.
நாட்டின் சட்டங்களைக் காற்றில் பறக்கவிட்டு, வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தி.மு.க., அரசு, இதற்கான விலையை நிச்சயம் கொடுக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
வாசகர் கருத்து (26)
V வைகுண்டேஸ்வரன் - Chennai,இந்தியா
04 பிப்,2025 - 10:37 Report Abuse
போட்டோ சூப்பர். நெஞ்சில் பக் பக் னு அடிச்சுக்குதா?? அப்படித்தான் இருக்கும். இருக்கணும். ஏதாவது கலவரம் பண்ணலாம் னு என்ன பிளான் போட்டாலும் சட்ட ரீதியாகவே முதல்வர் தடுத்து விடுகிறார் என்று நெஞ்சில் அடிச்சுக்கோ
0
0
Reply
Mohan - COIMBATORE,இந்தியா
04 பிப்,2025 - 10:04 Report Abuse
கூவிகிட்டே இருந்தால் ஒன்னும் நடக்காது.. நீங்க நினைப்பது போல இந்த ஆட்சியின் மீது ஓரளவுக்கு தான் வெறுப்பு ஹிந்துக்களிடையே உள்ளது ..மற்றபடி சிறுபான்மையினர் முழுக்க முழுக்க ஏகோபித்த ஆதரவு உண்டு ....அதனால மத்திய அரசு எதாவது நடவடிக்கை எடுத்தால் உண்டு இல்லாட்டி 2026 ல கண்டிப்பா 150/234 ஜெயிக்கும் ...ஹிந்துக்கள் ஓட் வென அவ்ளோவா விழாது அதையும் கோட்டார் கோழி பிரியாணி போட்டு வாங்கிருவாங்க, அதோட சிறுபான்மையினர் வோட், கள்ள குடியேறிகள், ...
அண்ணாமலை திருப்பரங்குன்ற கோவிலையே இடித்தாலும் மானம் கெட்ட இந்துக்கள் வோட் உண்டு மறந்துராதீங்க
0
0
Reply
தேவராஜன் - ,
04 பிப்,2025 - 09:42 Report Abuse
நவாஸ் கனி பிரியாணி கொட்டிச் சென்ற போது 144 தடை உத்தரவை அமுல் படுத்ததாத மாநில அரசு மத நல்லிணக்கத்தை காக்கத் தவறி விட்டது. இதற்காக தமிழக அரசை மத்திய அரசு அரசியல் அமைப்புச் சட்டம் 356-ஐப் பயன்படுத்திக் கலைக்க வேண்டும்.
0
0
Reply
venkatesan - ,
04 பிப்,2025 - 09:33 Report Abuse
No Good
0
0
Reply
AMLA ASOKAN - ,இந்தியா
04 பிப்,2025 - 09:14 Report Abuse
அமைச்சர் மூர்த்தி எங்கே, எந்தஇடத்தில் ஊர்வலம் செல்ல உள்ளார் என்பதை அண்ணாமலை தெளிவு படுத்தவில்லை .
0
0
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
04 பிப்,2025 - 09:32Report Abuse
திருப்பரங்குன்றம் மலைமீது 2012ல் வெடிகுண்டு, பேட்டரிகள், மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதாம் ....
0
0
Reply
V வைகுண்டேஸ்வரன் - Chennai,இந்தியா
04 பிப்,2025 - 09:07 Report Abuse
மதக் கலவரம் உருவாக்க நினைத்து ஊர்வலம், போராட்டம் எல்லாம் திட்டமிடும் மதவாத கும்பல்களுக்கு 144 தடை மட்டுமல்ல 1440 தடை விதிக்க வேண்டும். அமைச்சரின் ஊர்வலம் மதம் சாதிகளுக்கு அப்பாற்பட்ட ஊர்வலம்.
0
0
M.LAKSHMANAN - ,இந்தியா
04 பிப்,2025 - 09:23Report Abuse
Pls eat food
0
0
Subramaniyam N - Salem,இந்தியா
04 பிப்,2025 - 09:26Report Abuse
Rubbish. Dont abuse hindus and blindly support DMK even now for their misuse of power
0
0
Mohammad ali - ,இந்தியா
04 பிப்,2025 - 09:28Report Abuse
உனக்கு நல்ல புத்தியே வராதா ? 144 தடைன்னா எல்லாருக்கும்தான். இந்து கோவிலில் பிரியாணி சாப்பிட அது மத கலவரம் இல்லையா? உனக்கு மட்டும் ஏன் சாக்கடை புத்தி ?
0
0
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
04 பிப்,2025 - 09:30Report Abuse
திருப்பரங்குன்றம் மலைமீது 2012ல் வெடிகுண்டு, பேட்டரிகள், மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதாம் ......இதுதான் மத சார்பின்மை ....
0
0
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
04 பிப்,2025 - 09:31Report Abuse
மலையில் திட்டமிட்டு பச்சை வண்ணத்தை மத சார்பின்மையாக வரைந்தவன் எவன் ??....
0
0
கல்யாணராமன் - Chennai,இந்தியா
04 பிப்,2025 - 09:35Report Abuse
உணவை தவிர ...?
0
0
guna - ,
04 பிப்,2025 - 10:33Report Abuse
அங்கே பிரியாணி கிடைக்காது என்ற ஆதங்கத்தில் கருத்து போடுகிறார்..ஹி. ஹை...
0
0
guna - ,
04 பிப்,2025 - 10:45Report Abuse
ஹேப்பி நியூஸ்....கவர்னருக்கு எதிராக வழக்கு தள்ளுபடி...
0
0
Kubendran N - VASCO DA GAMA,இந்தியா
04 பிப்,2025 - 10:45Report Abuse
பார்த்து பள்ளு படாம
0
0
Reply
sridhar - Chennai,இந்தியா
04 பிப்,2025 - 08:55 Report Abuse
இந்த நாசமாப்போன ஹிந்து விரோத திமுக கூட்டணி ஆட்சி என்னிக்கி ஒழியும். ஹிந்துக்களே, திமுகவை விட்டு வெளியேறி பிராயச்சித்தம் செய்துகொள்ளுங்கள் .
0
0
Reply
பேசும் தமிழன் - ,
04 பிப்,2025 - 08:54 Report Abuse
சட்ட விரோத ஆட்சி கலைக்கப்பட வேண்டும்.... ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்.... அப்போது தான் அனைவருக்கும் சமமான அளவில் நீதி கிடைக்கும்.
0
0
Reply
K.J.P - ,இந்தியா
04 பிப்,2025 - 08:54 Report Abuse
சமீக காலமாக திராவிட மாடல் அரசு தனது பெயரை கெடுத்து கொண்டு வருகிறது.
0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
04 பிப்,2025 - 08:53 Report Abuse
கோவையில் குண்டு வெடித்தது விடியல் திராவிடனுங்க ஆட்சியில் .... கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி மறைவுக்கு ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியவன் நாம் தமிழர் கட்சி தலைவன் ...திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றி சொன்னவன் நாம் தமிழர் கட்சி தலைவன் ...மானமுள்ள தமிழன் இவர்களுக்கு வோட்டு போட மாட்டான் ....
0
0
Reply
மேலும் 6 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement