ராமேஸ்வரத்தில் கஞ்சா பதுக்கிய தி.மு.க., கவுன்சிலர் மகன் உட்பட 6 பேர் சிக்கினர்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த தி.மு.க., கவுன்சிலர் மகன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.

ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் போலீசார் ரோந்து சென்றபோது அங்கு பதுக்கி வைத்திருந்த 4 கிலோ கஞ்சா மற்றும் 100 கிராமில் 20 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த முனீஸ்வரன் 30, ராமேஸ்வரத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் 25, சதீஷ்குமார் 23, ராஜேஷ் கண்ணா 24, சந்தோஷ் குமார் 23, நிதீஷ்குமார் 22(இவர் ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., கவுன்சிலர் சத்தியமூர்த்தி மகன்) ஆகியோரை பிடித்து விசாரிக்கின்றனர்.

இதில் சொந்த பயன்பாட்டிற்காக நிதீஷ்குமார் கஞ்சா பொட்டலம் வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதனை ராமேஸ்வரம் பகுதியில் நேரடியாகவும், கஞ்சா விற்கும் சிலரிடமும் விற்க வைத்திருந்ததாக தெரிகிறது.

இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதால் மேல்விசாரணை நடக்கிறது.

பாம்பனில் இருவர் கைது



பாம்பன் ரயில்வே ஸ்டேஷன் அருகே விற்பனைக்காக டூவீலரில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பாம்பனை சேர்ந்த முத்தையா ரோஷன் 26, திவாஸ்கர் 23, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement