1.7 கிலோ கஞ்சா 3 பேர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையிலான போலீசார் இம்ரான் நகர் சலீம் மகன் முகமது இஸ்மாயில் வீட்டில் சோதனை செய்தனர்.

அவரது வீட்டின் பின்பகுதியில் இருந்து 1.700 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முகமது யூசப் 25, இலியாஸ் 19, 15 வயது சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்து முகமது இஸ்மாயில் 23, ஆசிவ் 22 ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertisement