தைப்பூச முகூர்த்தக்கால் நடும் விழா
இளையான்குடி: பெரும்பச்சேரி வேல்முருகன் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:00 மணிக்கு காப்பு கட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டது.
பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.வரும் 10ம் தேதி யாகசாலை பூஜை ஆரம்பிக்கப்பட்டு பரிவார தெய்வங்களான தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன்,லிங்கோத்பவர், நாகநாதர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. 11ம் தேதி அதிகாலை அபிஷேக,ஆராதனைக்கு பின் யாகசாலை பூஜை நிறைவு பெறுகிறது. காலை 7:00 மணிக்கு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் இருந்து வைகை ஆற்றுக்கு சென்று பால்குடம் எடுத்து வந்து வேல் முருகனுக்கு அபிஷேகம் செய்ய உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement