கார் விபத்தில் டிரைவர் பலி

ஆத்துார்:தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த கார் டிரைவர் ரகுபதி 38. சென்னை போரூரில் தங்கி பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் சென்னையை சேர்ந்த புருேஷாத்தமன், திருவேங்கடம், மணிகண்டன், பிரகாஷ் ஆகியோரை பொள்ளாச்சியில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு காரில் ரகுபதி அழைத்துச் சென்றார்.

நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சாமியார்கிணறு மேம்பாலத்தில் வந்தபோது சிமென்ட் லோடுடன் முன்புறம் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது.

இதில் ரகுபதி உட்பட ஐந்து பேரும் படுகாயமடைந்து ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரகுபதி உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement