மனித- வன விலங்கு மோதலில் 80 பேர் உயிரிழப்பு; 5 ஆண்டுகளில் இதுவே அதிகம்!
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848322.jpg?width=1000&height=625)
சென்னை: தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் இதுவரை, மனித- வன விலங்கு மோதலில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் இதுவே மிக அதிகம்.
தமிழகத்தில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. குறிப்பாக மலை பகுதிகளில் மனிதர்களை வனவிலங்குகள் தாக்கி வருகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
வால்பாறை அருகே டைகர் பள்ளத்தாக்கில் காட்டு யானை தாக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் மட்டும், மனித- வன விலங்குகள் மோதலில் 80 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதுவே கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிகம். ஆண்டு வாரியாக, மனித- வன விலங்குகள் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு:
2020-21ம் ஆண்டு- 58 பேர்,
2021-22ம் ஆண்டு- 40 பேர்,
2022-23ம் ஆண்டு-43 பேர்,
2023-24ம் ஆண்டு- 62 பேர்,
2024-25ம் ஆண்டு- 80 பேர்,
இது குறித்து வன விலங்கு ஆர்வலர்கள் கூறியதாவது: தமிழகத்தில் மனித- வன விலங்கு மோதல் அதிகரித்துள்ளது. 2024-25ம் ஆண்டில், வன விலங்குகளால், 259 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மனிதர்கள் 138 பேர் பலத்த காயமுற்றனர். 100க்கும் சொத்துக்கள் சேதமாகி உள்ளன.
மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. வனத்துக்கு அருகாமையில் குடியிருப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது, வன விலங்குகள் தாக்குதல் நடக்க முக்கிய காரணமாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
![ديفيد رافائيل ديفيد رافائيل](https://img.dinamalar.com/data/uphoto/5820_054821825.jpg)
மேலும்
-
பனாமா கால்வாய் விவகாரம்; மிரட்டலுக்கு பணிந்தது பனாமா!
-
புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை; ஒரு சவரன் ரூ.63,440, ஒரு கிராம் ரூ.7,930!
-
8.83 லட்சம் பாஸ்போர்ட் 2024ம் ஆண்டில் வினியோகம்
-
ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்
-
சென்னையில் கொடூரம்: ஆட்டோவில் பாலியல் தொல்லை; 2 பேர் கைது
-
பிறப்பால் குடியுரிமை தொடர்பான டிரம்ப் உத்தரவு: மீண்டும் தடை விதித்தது நீதிமன்றம்!