பிறப்பால் குடியுரிமை தொடர்பான டிரம்ப் உத்தரவு: மீண்டும் தடை விதித்தது நீதிமன்றம்!
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848326.jpg?width=1000&height=625)
வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், அதிபர் டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவுக்கு அமெரிக்க நீதிபதி தடை விதித்து உத்தரவிட்டார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், ஜனவரி 20ம் தேதி பதவியேற்றார். முதல் நாளிலேயே, பிறப்பால் குடியுரிமை வழங்கப்படுவதில் சில கட்டுப்பாடுகளை விதித்து அவர் உத்தரவு பிறப்பித்தார். அதன் படி, 'சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமை வழங்கப்படாது. தற்காலிகமாக, அதாவது வேலைக்காக அமெரிக்காவுக்கு வந்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் தானாகவே குடியுரிமை வழங்க முடியாது என கூறப்பட்டது.
இந்த உத்தரவு பிப்ரவரி 19ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கடந்த ஜனவரி 24ம் தேதி, 'இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கு, அமெரிக்கா மாவட்ட நீதிபதி ஜான் கோஹனூர் தற்காலிக தடை விதித்தார். இந்நிலையில், மற்றொரு அமெரிக்க நீதிபதியும் இதேபோன்று தடை விதித்து உத்தரவிட்டார்.
இது குறித்து அமெரிக்கா மாவட்ட நீதிபதி டெபோரா கூறியதாவது: பிறப்புரிமை தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை நாட்டின் எந்த நீதிமன்றமும் ஆதரிக்கவில்லை. இந்த உத்தரவு அரசியலமைப்பிற்கு விரோதமானது. இன்று அமெரிக்கா மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போதே அமெரிக்கா குடிமகனாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
![M. PALANIAPPAN M. PALANIAPPAN](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![GMM GMM](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![ديفيد رافائيل ديفيد رافائيل](https://img.dinamalar.com/data/uphoto/5820_054821825.jpg)
மேலும்
-
எதிர்க்கட்சிகள் கடும் அமளி; லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு
-
டில்லியில் தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம்; ராகுல், அகிலேஷ் பங்கேற்பு
-
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம்: வழக்கு விசாரணையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி
-
பிரேக்கப் செய்த காதலி; இன்ஸ்டாவில் அவதூறு பரப்பிய காதலன் கைது
-
கேரளாவில் 3 புலிகள் உடல் மீட்பு; இறப்பின் பின்னணி குறித்து விசாரணை
-
திருப்பூரில் பஸ் கவிழ்ந்து விபத்து; 2 பேர் பலி