'போக்சோ' குற்றங்கள் தொடர்ந்து உயர்வு: பெற்றோருக்கு வேண்டும் விழிப்புணர்வு

14

கோவை: போக்சோ குற்றங்கள் அதிகரித்து வருவதால், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 421 ஆக கூடியுள்ளது. வழக்கை விரைந்து முடிக்க, துரித விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பெற்றோர் விழிப்புடன் இருந்தால், போக்சோ குற்றங்களை தடுக்கலாம்.

பெண் சிறார்கள் மீதான பாலியல் குற்ற செயல்கள் அதிகரித்து வருவதால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) கொண்டு வரப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை அல்லது அதிகபட்சமாக துாக்கு தண்டனை விதிக்கும் வகையில், சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளில் அதிகரிப்பு

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 2019 முதல் 'போக்சோ' வழக்குகள் முதன்மை சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. 'போக்சோ' சட்டப்பிரிவின் கீழ், கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டுக்குள் விசாரணை முடித்து, தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்கிறது சட்டம்.

கோவையில், 2019 டிச.,ல், போக்சோ சிறப்பு கோர்ட் திறக்கப்பட்ட போது, மாவட்டம் முழுவதும், 120 வழக்கு மட்டும் நிலுவையில் இருந்தது. ஆனால், 2020ல், 182 ஆகவும், 2021ல், 239 ஆகவும், 2022 ல், 308 ஆகவும், 2023 ல், 353 ஆகவும், 2024ல், 421 ஆகவும் நிலுவை வழக்கு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. 2022ல், 231 புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே ஆண்டில், 206 வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

2023ல், 165 புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 130 வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டில், 303 புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில், 234 வழக்கில் தீர்வு காணப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2024ல், புதிய வழக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

நிலுவை வழக்குகளும் அதிகம்

வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, ஓராண்டுகள் வரை நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கை, 274 ஆகவும், 2-3 ஆண்டுகள் வரை, 177 வழக்கும், 4-5 ஆண்டுகள் வரை, 52 வழக்கும், 6-10 ஆண்டுகள் வரை, 10 வழக்கும் உள்ளது.

ஆகவே, வழக்குகளை விரைந்து முடிக்க, துரித விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, விரைவான விசாரணை நடத்தி, தண்டனை அளிக்கப்படும் பட்சத்தில், குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.

'போலீசாருக்கு பயிற்சி தேவை'

போக்சோ குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து, வக்கீல் வி.பி.சாரதி கூறியதாவது: தற்போதைய சூழ்நிலையில், பெரும்பாலான குடும்பங்களில், கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர். இதனால் குழந்தைகளை கண்காணிக்க, நேரம் கிடைப்பதில்லை. குழந்தைகள் மொபைல் போனை தவறாக பயன்படுத்துவது, முக்கியமாக, மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் உபயோகித்தல் போன்றவற்றாலும், பாலியல் குற்றங்கள் அதிகரிக்கிறது. போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்தால், இதுபோன்ற குற்ற செயல்களை குறைக்கலாம். மொபைல் போன் பயன்பாடு குறித்து, குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 'சைல்டு லாக்' போட்டு கொடுத்து விட்டால் பிரச்னை இருக்காது. போக்சோ வழக்கில், புகார் கொடுத்தவுடன், காவல்துறையினர் எப்.ஐ.ஆர்., போடாமல் அலைக்கழிக்கின்றனர். போக்சோ வழக்கை கையாளும் முறை போலீசாருக்கு தெரிவதில்லை. அவர்களுக்கு அவ்வப்போது தனி பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு, வக்கீல் சாரதி கூறினார்.

Advertisement