ரயில் சேவையில் மாற்றம்

மதுரை; மதுரை, சேலம் கோட்டங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவையில் கீழ்காணும் மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பிப். 19, 28 ல் பாலக்காடு - துாத்துக்குடி - பாலக்காடு ரயில்கள் (16791/16792) கொல்லம் - துாத்துக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

இன்று, பிப். 8, 10ல் செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5:10 மணிக்கு புறப்படும் ஈரோடு ரயில் (16846) கரூர் வரை இயக்கப்படும். மறுமார்க்கம் செங்கோட்டை ரயில் (16845) அன்றைய தினங்களில் மதியம் 3:05 மணிக்கு கரூரில் இருந்து புறப்படும். இவ்விரு ரயில்களும் கரூர் - ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

Advertisement