வங்கி மோசடி; 5 பேருக்கு தண்டனை
மதுரை; திருநெல்வேலியில் உள்ள தேசியமய வங்கியில் 2007-09 ல் தலைமை மேலாளராக பணிபுரிந்தவர் பாலசுப்பிரமணியன். அவர் உட்பட சிலர் கூட்டுச் சதி செய்து ஒரு தொழில் நிறுவனத்திற்கு விதிகளை மீறி கடன் வழங்கி வங்கிக்கு ரூ.1 கோடியே 26 லட்சத்து 91 ஆயிரத்து 515 இழப்பு ஏற்படுத்தியதாக சி.பி.ஐ.,வழக்கு பதிந்தது. மதுரை சி.பி.ஐ.,நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
பாலசுப்பிரமணியன், கல்யாணசுந்தரம், அன்னசரஸ்வதி, மோகன்ராஜ், கீதாவிற்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, பாலசுப்பிரமணியனுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம், மற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சண்முகவேல் உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து (1)
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
06 பிப்,2025 - 07:53 Report Abuse
வாழ்க நீதி. இத்தனை வருடங்கள் கழித்து தண்டனை கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன. அவர்கள் இத்தனை வருடங்களாக சுதந்திரமாக உள்ளார்கள். இதை பார்த்து அடுத்தவனும் திருடுவான். எப்படியும் 20வருடம் ஆகும். நீதிமன்றங்கள் சிந்திக்க வேண்டும்
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement